
செ.வே.முத்தமிழ்மன்னன்
கோலாலம்பூர் மே 15-
நாடு முழுவதும் உள்ள 470,350 பெறுநர்கள் பயன்பெறும் வகையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் (MSMEகள்) துறைகளுக்கு 2023/2024 இன் கீழ் 270 தொழில் முனைவோர் திட்டங்களுக்காக RM15.11 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது மிகவும் வரவேற்கக் கூடியது என்று மலேசிய இந்தியர் சிறுதொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் டத்தோ இராமநாதன் தெரிவித்தார்.
துணை பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி நேற்று இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நாட்டில் சிறுதொழில் முனைவோர் வளர்ச்சியை மேம்படுத்த இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது பாராட்டுக்குரியது
இது தொழில் முனைவோரை வளர்ப்பது மற்றும் MSME களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது” என்று டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி சுட்டிக் காட்டியிருப்பதை பெரிதும் வரவேற்கிறேன்.
அரசாங்கம் வழங்கியிருக்கும் இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள இந்திய சிறு தொழில் முனைவர்கள் தங்கள் வணிகத்தை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்புக் கிட்டி இருக்கிறது என்று அவர் சொன்னார்.

