தாயின் சொல்லை தெய்வ வாக்காக பின்பற்றி கல்வியில் சாதனை படைத்துள்ளார் டாக்டர் சுப்ரமணியம்

மா.பவளச்செல்வன்

கல்வி ஒன்று தான் நிரந்தர சொத்து என தனது தாய் சொன்ன சொல்லை தெய்வ வாக்காக எடுத்து கொண்டு கல்வியில் சாதனை படைத்துள்ளார் டாக்டர் சுப்ரமணியம் கோவிந்தன்.

கெடா, சுங்கை கெத்தா பிடோங் எனும் தோட்டத்தில் பிறந்த இவர் இளம் வயதில் பல்வேறு துன்பங்களை அனுபவித்துள்ளார்.

தனது தந்தை கோவிந்தன் அரசியல் பிரதிநிதியாக இருந்தாலும் வருமான ரீதியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் மூத்த மகனாக அவர் பிறந்துள்ளார்.

இருந்தாலும் தம்மை ஒரு பட்டதாரியாக உருவாக்க வேண்டும் என தந்தை ஆசை பட்டார்.

சுங்கை பட்டாணி இப்ராஹிம் பள்ளியில் கல்வியை முடித்த அவர் பின்னர் 6ஆம் படிவ கல்வியை தொடர்ந்தார்.

அதன் பின்னர் அச்சக துறையில் தொழில் கல்வி கற்று அங்கேயே பேராசிரியராகவும் பணி புரிந்ததாக சுப்ரமணியம் கூறினார்.

USM பல்கலைக்கழத்தில் வேலை கிடைத்து N9 எனும் மிக சிரிய நிலையிலான வேலைக்கு 350 ரிங்கிட் சம்பளத்தில் அவர் பணியாற்றினார்.

வாழ்க்கையில் தொடர்ந்து கல்வி கற்க வேண்டும். பெற்றோருக்கு பெருமை சேர்க்க வேண்டுக் என்ற எண்ணத்தில் போராடி வந்த நேரத்தில் தனது தாயின் இறப்பு தம்மை சோகக் கடலில் ஆழ்த்தியதாக சுப்ரமணியம் கண்ணீர் மல்க கூறினார்.

அதன் பின்னர், கடுமையான உழைப்பின் பலனாக 5 ஆண்டுகளில் N9 கிரேட்டில் இருந்து 17 வரையில் உயர்ந்ததாக அவர் சொன்னார்.

அதோடு நின்று விடாமல் வர்த்தக துறையில் ஐந்தாண்டுகள் கல்வி தொடரப்பட்டது. அதே சமயம் மாஸ்டர் படிப்பையும் அவர் தொடர்ந்துள்ளார்.

கல்வியில் தொடர் சாதனைகளின் பரிசாக n41 கிரேட் பிரிவில் usm பல்கலைக்கழகத்தில் துணை பதிவாளராக பணி புரிந்து இறுதியாக N52 எனும் உயரிய கிரேட் பதவிக்கு அவருக்கு கிடைத்தது.

தம்முடைய இந்த வெற்றிக்கு பெற்றோர் எவ்வளவு துணை புரிந்தார்களே அத்தனை அளவிற்கு தனது மனைவியும் பேராதரவு வழங்கினார்.

தமிழ்ப்பள்ளி ஆசிரியரான அவர் தம்முடைய கல்விக்கு துணை நின்றதோடு குடும்பத்தையும் சிறப்பான முறையில் வழிநடத்தினார்.

3 முறை மாநில ரீதியில் தமக்கு விருதுகளும் வழங்கப்பட்டது.

இறுதியாக கடந்த 2020ஆம் ஆண்டு வர்த்தக நிர்வகிப்பு துறையில் கல்வி கற்றும் doctorate பட்டத்தை அவர் பெற்றுள்ளார்.

இது தமது தந்தையின் கனவாகும் என்பதையும் அவர் நினைவுக் கூர்ந்தார்.

தனது மூன்று தங்கைகளையும் ஒரு சகோதரையும் மேல் படிப்பு படிக்க வைக்க முடியாமல் போனதை எண்ணி வருந்தியதுண்டு. அதனை நிவர்த்தி செய்ய உடன் பிறந்தவர்களின் பிள்ளைகள் அனைவரையும் பட்டதாரிகளாக உருவாக்கினேன்.

தனது மூத்த மகன் மருத்துவராக பணிபுரிகிறார். இரண்டாவது மகள் மருந்தக துறையில் பட்டம் பெற்றுள்ளார். மூன்றாவது மகள் USM பல்கலைக்கழகத்தில் வர்த்தக நிர்வகிப்பு துறையில் இளங்கலை கல்வி மேற்கொண்டு வருகிறார்.

அதோடு, பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்களின் நலன் அமைப்புகளில் பணியாற்றி ஆயிரங் கணக்கான மாணவர்களை உருவாக்கியுள்ளேன்.

வருடத்திற்கு 100 இந்திய பட்டதாரி மாணவர்களை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையுடன் செயல்பட்டு வருகிறேன்.

60 வயதாகி பின்னர் ஓய்வு பெற்றாலும் தனியார் கல்வி நிறுவனத்தில் இயக்குனராக பணியாற்றி மாணவர்களுக்கு கல்வி சார்ந்த பயிற்ச்சிகளை வழங்கி வருகிறேன்.

அண்மையில், ஒய்.எஸ்.எஸ் எனப்படும் மாணவ தன்னார்வ வாரியத்தின் புதிய இயக்குனராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒற்றுமை துறை அமைச்சர் டத்தோ ஏரன் ஆகோ டாகாங், அந்த நியமன கடிதத்தை வழங்கியுள்ளார்.

என் தாய் எனக்கு சொன்ன அறிவுறையை தான் இன்றைய இளைஞர்களுக்கு நான் கூற விரும்புகிறேன்.

கல்வி மட்டுமே நமது அசைக்க முடியாத சொத்து. எனவே, துறைகளை தேர்வு செய்யாமல் கிடைத்த துறையில் சாதனை படைக்க வேண்டும் என டாக்டர் சுப்ரமணியம் அறிவுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles