
கோலாலம்பூர் மே 13-
கடந்த வாரம் பெய்த அடை மழையால் தலைநகர் ஜாலான் சுல்தான் இஸ்மாயில் உள்ள மோனோ ரயில் தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் அந்த தண்டவாளமே பெரும் பாதிப்புக்கு ஆளானது.
மரம் விழுந்ததால் பல கார்களும் பெரும் சேதம் அடைந்தன.
இதில் மரம் விழுந்து மரணமடைந்த முகமட் ரிஜால் குடும்பத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிதியுதவி வழங்கினார்.
பிரதமர் அந்நிதியுதவியை தனது அரசியல் செயலாளர் அகமட் ஃபர்ஹான் ஃபௌசியின் மூலம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மரணமடைந்த முகமட் ரிஜாலுக்கு 9 முதல் 14 வயதுடைய நான்கு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் பள்ளியில் படிக்கின்றனர்.
மறைந்த முகமட் ரிஜாலின் ஆன்மா சாந்தியடைய தாம் பிராத்தனை செய்வதாகவும் பிரதமர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

