பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவர் – நான்கு குழைந்தகளுடன் வருமையுடன் போராடும் உமாவதி சிறுதொழில் தொடங்க உதவிக்கரம் நீட்டினார் டாக்டர் சத்திய பிரகாஷ்

காளிதாஸ் சுப்ரமணியம்

ரவாங் புக்கிட் புருந்தோங் தாமான் பூங்கா ராயாவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவர் – நான்கு குழைந்தகளுடன் வருமையுடன் போராடும் குடும்ப மாது உமாவதிக்கு வருமானம் ஈட்டுவதற்கு சுய தொழில் ஆரம்பிக்க டாக்டர் சத்திய பிரகாஷ் உதவிகரம் நீட்டியுள்ளார்.

உமாவதியின் கணவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டதால் அவர் வேலை செய்யும் சக்தியை இழந்து விட்டார்.

உமாவதியின் மூன்று பிள்ளைகள் தற்போது புக்கிட் புருந்தோங் தமிழ் பள்ளியில் பயில்கிறார்கள்.

குடும்பச் செலவுகளுக்கும் பிள்ளைகளின் படிப்பிற்க்கும் கணவரின் மருத்துவச் செலவுக்கும் பணம் இல்லாமல் பெரிதும் சிறமத்தை எதிர்நோக்கியுள்ளார் உமாவதி.

இதனை கேட்டறிந்த உலுசிலாங்கூர் கவுன்சிலர் புவனேஸ்வரன் அறிவிப்பாளர் ஆனந்த் இருவரும் ஓராண்டுக்கு இவர்களின் பஸ் போக்குவரத்து செலவை உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் ஆதரவுடன் உதவி செய்துள்ளனர்.

ரவாங் பகுதிகளில் வங்கிகளுக்கு முன்னிலையில் உமாவதி திசூ பேப்பரை விற்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்

இந்நிலையில் தமக்கு சிறு வியாபாரம் தொடங்க உதவி புரியும் படி கேட்டுக் கொண்டுள்ளார்.

இவரின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இன்று சிறு வியாபாரம் செய்வதற்கு சிறு மானியமும் கூடாரம், மேசை நாற்காலி, உட்பட பிளாண்டர் ஆகிய பொருட்களை வாங்கி கொடுத்தார் டாக்டர் சத்திய பிரகாஷ்.

சிறு வியாபாரத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் இவரின் குடும்பம் ஒரளவு கஷ்டத்திலிருந்து மீளும் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் தெரிவித்தார்.

பிரபலமான ஓயே உணவகமும் உமாவதிக்கு வியாபாரத்திற்க்கு தேவையான பொருட்களும் வாங்கி கொடுத்துள்ளது.

எந்த சூழ்நிலையிலும் மக்களுக்கு தேவையான உதவிகளும் சேவைகளும் வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம் என்றார் டாக்டர் சத்திய பிரகாஷ்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles