
சுங்கை சிப்புட், மே 15-
சுங்கை சிப்புட் – மத்திய அரசினால் முன்னெடுக்கப்பட்ட எம்.எஸ்.எம்.ஏ (MSMA) சுற்றுச்சூழலுக்கு உகந்த வடிகால் மற்றும் நீர்த்தேக்க திட்டம் 90% தயாராகிவிட்ட போதிலும், குப்பைகளையும் தளவாடங்களையும் வடிகாலில் வீசும் தனிநபர்களின் பொறுப்பற்ற நன்நடத்தையற்ற அணுகுமுறையால் இங்குள்ள வீடமைப்பு பகுதிகளில் வெகுநாட்களாக ஏற்படும் திடீர் வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது என்று ஜாலோங் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பிணருமான மாண்புமிகு லோ சீ தெரிவித்தார்.
வடிகால்களிலும் ஆறுகளிலும் வீசப்படுகின்ற மெத்தைகள், மரப்பேலைகள், துணிகள் மற்றும் பல தளவாடப்பொருட்கள் கனமழை பெய்யும் போது நிலமையை மோசமடைய செய்து, திடீர் வெள்ளத்திற்கு வித்திடுகிறது.
இதனால் ஜாலோங் சட்டமன்றத்திற்குட்பட்ட குடியிறுப்புப்பகுதிகளான தாமான் முஹிபா ஜயா, தாமான் ஒக்கிட், தாமான் துன் சம்பந்தன், தாமான் கிலேடாங், சுங்கை பூலோ, தாமான் லிந்தாங் மக்மூர் போன்ற பகுதிகளில் வாழும் பல குடும்பங்கள் அடிக்கடி சிரமத்திற்கு ஆளாக்குகின்றர்.
“சுற்றுச்சூழலுக்கு உகந்த வடிகால் மற்றும் நீர்த்தேக்கத் திட்டம் (எம்எஸ்எம்ஏ) இருப்பதால், இந்த பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு பிரச்சனை படிப்படியாக சரியாகி வருகிறது.
90 சதவீத முன்னேற்றத்தை எட்டியுள்ள இத்திட்டத்தில், சுங்கை பூலோ, சுங்கை நியமுக், சுங்கை பெம்பன் மற்றும் சுங்கை சின்டாங் ஆகிய நான்கு ஆறுகளில், ஆற்றை ஆழப்படுத்துதல், நீர்த்தேக்கங்கள் உருவாக்குதல் மற்றும் வடிகால் அமைத்தல் ஆகியவை அடங்கும்.
“இருப்பினும், கடந்த சில மாதங்களாக, மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுவதன் காரணமாக ஆய்வு செய்தபோது, கழிவுகளை வாய்க்கால் மற்றும் ஆறுகளில் வீசும் மக்களின் மனப்பான்மையால், மழைநீர் தேங்கி, பின்னர் பெருக்கெடுத்து வெள்ளப்பெருக்கு ஏற்படுது கண்டறியப்பட்டதென ஜாலோங் சட்டமன்ற உறுப்பினரின் இந்தியர் நலப்பிரிவு அதிகாரியும் தாமான் முஹிபா ஜயா பகுதிக்கான கோலாகங்சார் நகராண்மை கழக உறுப்பினருமான திரு. கோபி இராமசாமி கூறினார்.
துப்புரவுப் பணியின் போது, ஒரு இடத்தில் மட்டுமே சுமார் 1.5 டன் இடை கொண்ட குப்பைகளையும் கழிவுகளையும் சுத்தம் செய்யப்பட்டது. இவ்வாரண நிலை தொடருமாயின் எவ்வாராண மேம்பாடுகளை கொண்டுவந்தாலும் பயனழிக்காது என்று அவர் கூறினார்.
மேலும், இங்குள்ள தாமன் லிண்டாங் மக்மூர், நீர்த்தேக்க ஏரியினால் ஏற்படும் வெள்ளப்பிரச்சனையை களைய அமைக்கப்பட்ட நீர் உரிஞ்சி இயந்திரத்தின் மின்சார கேபில்களை சில பொறுப்பற்ற தரப்பினர் திருடிடயதின் விளைவாள் அவ்வியந்திரம் செயலிழந்து சில நாட்களுக்கு முன்பாக பெய்த திடிர் அடை மழையில் மீண்டும் அக்குடியிருப்புப் பகுதியில் வெள்ளம் ஏற்பட காரணமாயிற்று என்று அவ்விடத்திற்கு மாணமிகு லோ சீ யீ அவர்களை நேரில் அழைத்துச் சென்று காண்பித்த திரு. கோபி, மீண்டும் அவ்வியந்திரம் செயல்படவும் அதற்கான பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்தவும் ஏற்பாடு செய்துள்ளார்.
தாமன் முஹிபா ஜெயா, கம்போங் முஹிபா, ரிம்பா பஞ்சாங்கம், தாமான் லிந்தாங் மக்மூர் போன்ற இடங்களில் நீர்ப்பிடிப்புக் குளங்களைப் பராமரிக்க கடந்த ஆண்டு ரிங்கிட் 1.65 மில்லியன் ஒதுக்கப்பட்டதாக மாண்மிகு லோ சீ யீ அவர்கள் கூறினார்.
ஆகவே, இது போன்ற வெள்ளப் பிறச்சனைகளை களைய தேசிய மாநில அரசுகள் மற்றும் நகராண்மை கழகம் பல்வேறு முயற்சிகளை கையாண்டுவரும் அதே வேளையில் பொது மக்களும் தங்களின் கடமையரிந்து செயல்பட கெட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

