ஆசிரியர்களின் தியாகங்களை போற்றி வணங்குவோம்! ஜொகூர் கண்ணன் வாழ்த்து செய்தி

கோலாலம்பூர் மே 16-
தாய், தந்தைக்கு அடுத்ததாக மதிக்கப்படும் ஒருவர் என்றால் அது ஆசிரியர்தான்.

சிறப்புமிக்க இந்த ஆசிரியர் தினத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜொகூர் மாநில இஸ்கந்தர் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரி எம். கண்ணன் தமது வாழத்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நம்மை கற்பித்த ஆசிரியர்களையும், நமக்கு வாழ்க்கையை பழக வைத்த ஒவ்வொரு ஆசிரியரையும் அங்கீகரித்து மரியாதை செய்யும் நாள் ஆசிரியர் தினம்.

இந்த அருமையான தருணத்தில் நமக்கு கல்வியறிவை ஊற்றிய அனைத்து ஆசியர்களின் தியாகங்களை போற்றி வணங்குவோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles