
கோலாலம்பூர்: மே 16-
சிங்கப்பூர் நாட்டின் புதிய பிரதமராக லோரன்ஸ் வோங் நியமிக்கப்பட்டார். அவருக்கு மலேசிய அமைச்சரவை மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் இன்று தெரிவித்தார்.
சிங்கப்பூர் நாட்டினை அடுத்தக்கட்டத்திற்குக் கொண்டு செல்லும் வல்லமை கொண்டு லோரன்ஸ் வோங் செயல்படுவார் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை கொள்வதாக மடானி அரசாங்கத்தின் பேச்சாளருமான ஃபாஹ்மி தெரிவித்தார்.
சிங்கப்பூர் நாட்டின் துணைப்பிரதமராக இருந்த லோரன்ஸ் வோங் நேற்று சிங்கப்பூர் நாட்டின் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் முன்னிலையில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
கடந்த 2004ஆம் ஆண்டு முதல் பிரதமராக இருந்த லீ சியேன் லுங் இருபது ஆண்டுகள் கழித்து தமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து லோரன்ஸ் வோங்கிடம் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெர்னாமா

