கஜகஸ்தானுக்குப் பிரதமர் பயணம்-ஒத்துழைப்பை வலுப்படுத்த திட்டம்!

அஸ்தானா, மே 16 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தொடங்கி இரு தினங்களுக்கு கஜகஸ்தான் நாட்டிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்கிறார்.

முப்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் நெருக்கமான ஒருங்கிணைப்பை உருவாக்க பிரதமரின் இப்பயணம் துணை புரியும் என என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மலேசியத் தூதர் முகமது அட்லி அப்துல்ல கூறினார்.

கடந்த 1992ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி அரச தந்திர உறவுகள் தொடங்கிய பிறகு பல்வேறு துறைகளில் நிலவும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான மலேசியாவின் நிலைப்பாட்டை இந்த அதிகாரப்பூர்வ பயணம் புலப்படுத்துகிறது.

Bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles