தகவல் அமைச்சு522 பணியாளர்களுக்குவிருதுகளை வழங்கி கௌரவித்தது!

செ.வே. முத்தமிழ்மன்னன்

புத்ரா ஜெயா மே 17-
தகவல் தொடர்பு துறை
அமைச்சின் கீழ் இயங்கும் இலாகா மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த 522 பணியாளர்களுக்கு நேற்று விருதுகளை வழங்கி கௌரவித்தது.

தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஃபாமி ஃபாட்சில் இந்த விருதுகளை வழங்கி கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தங்களுக்கு வழங்கப்பட்ட பணியை சிறந்த முறையில் செய்தவர்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டது.

இதன் முதல் பிரிவில் தொடர்புத்துறை அமைச்சு, ஆர்டிஎம் தரப்பைச் சேர்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

பின்னர் இரண்டாம் பிரிவில் மலேசிய தகவல் இலாகா, துன் அப்துல் ரசாக் ஒளிபரப்பு – தகவல் மையம், பெர்னாமா, பினாஸ், ஜெ-கோம், சுய தர பாதுகாப்பு இலாகா உள்ளிட்ட அமைப்புகளில் பணிபுரிபவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

அவ்வகையில் இந்நிகழ்ச்சியில் சாமளரூபன் த/பெ சுப்பையாவிற்கும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்த விருது நிகழ்ச்சியில் அமைச்சருடன் அமைச்சர் தியோ நி சிங், தொடர்புத்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ முகமட் பவ்சி, இலாகா தலைவர்கள், அமைச்சின் பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles