
லண்டன் மே 19-
2023-2024 ஆம் ஆண்டுக்கான இங்கிலீஷ் பிரீமியர் லீக் பட்டத்தை வெல்லப் போவது யார் என்பது இன்றிரவு தெரிந்து விடும்.
இன்று கடைசி ஆட்டத்தில் அர்செனல் தனது அரங்கில் எவர்ட்டனை சந்திக்கிறது.
அதேசமயம் மென்செஸ்டர் சிட்டி தனது அரங்கில் வெஸ்ட் ஹெமரை சந்திக்கிறது.
இதுவரை 37 ஆட்டங்கள் முடிவில் அர்செனல் 86 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
மென்செஸ்டர் சிட்டி 88 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
இன்றைய ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி டிரா கண்டால் கூட இங்கிலீஷ் பிரீமியர் லீக் பட்டத்தை வென்று சாதனை படைக்கும்.
இன்றைய ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி தோல்வி காண வேண்டும். அதேசமயம் அர்செனல் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் இங்கிலீஷ் பிரீமியர் லீக் பட்டத்தை அர்செனல் வெல்ல முடியும்.
ஆனால் இது நடக்கக்கூடிய காரியமா என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
மென்செஸ்டர் சிட்டி தொடர்ந்து நான்காவது முறையாக பட்டத்தை வெல்லும் வாய்ப்பு மிகவும் பிரகாசமாக கொண்டிருக்கிறது.
பிபிசி

