சிலாங்கூர் இந்தியர் சங்கத்தின்இளையோர் கிண்ணக் கால்பந்து போட்டி!10 மாவட்ட குழுக்கள் பங்கேற்பு

செ.வே. முத்தமிழ் மன்னன்

கோலாலம்பூர் மே 20-
எஸ்ஐஏ எனப்படும் சிலாங்கூர் இந்தியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இளையோர் கிண்ணக் கால்பந்து போட்டி வரும் ஜூன் மாதம் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.

சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த பத்து மாவட்ட குழுக்கள் இந்த போட்டியில் கலந்து கொள்கிறது.

ஏ – பிரிவில் சபா பெர்ணாம், கோலசிலாங்கூர், ஷா ஆலம், உலு லங்காட், சிப்பாங் குழுக்களும் பி பிரிவில் கோலலங்காட் பெட்டாலிங், உலு சிலாங்கூர், கோம்பாக், கிள்ளான் ஆகிய குழுக்கள் இடம் பெற்றுள்ளன.

21 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த போட்டி சிலாங்கூர் மாநில கால்பந்து சங்கத்தின் ஆதரவோடு நடைபெற்றது.

மலேசிய கால்பந்து சங்கத்தின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படும் இந்த போட்டியின் பூர்வாங்க ஆட்டங்கள் லீக் பாணியில் நடைபெறும்.

இரண்டு பிரிவுகளில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் குழுக்கள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.

எஸ்ஐஏ கிண்ணத்தை வெல்லும் குழுவுக்கு 5,000 வெள்ளி ரொக்கம் மற்றும் பரிசுகள் வழங்கப்படும்.

இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் குழுவுக்கு 3,000 வெள்ளியும் 3,4 ஆவது இடங்களை பிடிக்கும் குழுக்களுக்கு தலா ஆயிரம் வெள்ளி வழங்கப்படுகிறது.

சிலாங்கூர் இந்திய சமுதாயத்தின் துணை தலைவர் நடராஜன் மற்றும் செயலாளர் சந்தன ராஜு தலைமையில் இன்று குலுக்கல் நடைபெற்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles