
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் மே 20-
செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக்கிற்கு நேற்று துப்பாக்கி தோட்டா வுடன் கோலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
நேற்று நான் எனது இல்லத்திற்குத் திரும்பி எனது அஞ்சல் பெட்டியில் அஞ்சலை எடுத்தபோது உள்ளே ஏதோ கடினமான ஒரு உறை இருப்பதைக் கண்டேன்.
கவரைத் திறந்து அதிலிருந்த பொருட்களை எடுத்தபோது, இரண்டு தோட்டாக்களும், A4 அளவுள்ள வெள்ளைத் தாளும் இருந்தன.
“Cibailu Cina?!!! Lu Akan Mati !!! TUNGGU!!!” என்று கெட்ட வார்த்தையில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
எனக்கு வந்த கடிதம் மற்றும் கடிதம் மற்றும் தோட்டாவை பெட்டாலிங் ஸ்டேஷனில் உள்ள காவல்துறையிடம் ஒப்படைத்தேன்.
பின்னர் எனது குடியிருப்பில் உள்ள தபால் பெட்டி பிரிவில் போலீசார் சோதனை நடத்தினர் என்று அவர் சொன்னார்.
இது போன்ற மிரட்டல்கள் மற்றும் துப்பாக்கி குண்டுகள் எனக்கு ஏன் வந்தது என்று எனக்கு புரியவில்லை
என்று அவர் சொன்னார்.

