
செ.வே. முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர் மே 20-
2024 ஆம் ஆண்டு சரவாக்கில் நடைபெறும் சுக்மா போட்டியில் தங்கம் வெல்லும் விலாயா மாநில சிலம்ப விளையாட்டாளர் களுக்கு தலா ஆயிரம் வெள்ளி பரிசாக வழங்கப்படும் என்று டிபிகேஎல் எனப்படும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் வாரிய உறுப்பினர் எம். ஜெயக்குமார் தெரிவித்தார்.
வரும் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி சரவாக் சுக்மா போட்டி அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது.
இம்முறை தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பம் மற்றும் கபடி இடம் பெற்றுள்ளது.
சுக்மா போட்டியில் சிலம்பத்திற்கு 14 தங்கம் 14 வெள்ளி மற்றும் 28 வெண்கலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
விலாயா மாநிலத்தில் இருந்து மொத்தம் 18 விளையாட்டாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த போட்டியில் விலாயா மாநிலத்திற்கு தங்கம் பெற்றுத் தரும் விளையாட்டாளுக்கு எனது தனிப்பட்ட முறையில் ஆயிரம் வெள்ளி வழங்குவேன் என்றார் அவர்.
கோலாலம்பூர் சிலம்ப கழகத்தின் 43 ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தை இன்று அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த போது அவர் இந்த அறிவிப்பை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விலாயா மாநில சிலம்ப கழகத்தின் தலைவர் டாக்டர் ஆர்.டி. உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆண்டு கூட்டத்தில் மலேசிய சிலம்ப கழகத்தின் முன்னாள் தேசிய தலைவர் ஏ.என். விஸ்வ லிங்கம், டாக்டர் பி.எஸ். பிள்ளை, டாக்டர் புளோரென்ஸ் ஜோன்ஸ் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

