சமூக பொறுப்பு சார்ந்த திட்டங்களை தொடர்வதில் அதிக கவனம் செலுத்துவோம்!- ஓயே உணவகம்

காளிதாஸ் சுப்ரமணியம்

ரவாங், மே 20
சமூக பொறுப்புகள் சார்ந்த திட்டங்கள் மேலும் துரிதபடுத்துவதற்கான நடவடிக்களைகளை மேற்கொள்ளவிருப்பதாக ஓயே உணவ உரிமையாளர்கள் தங்களது எண்ணங்களை வெளிபடுத்தியுள்ளனர்.

நேற்று ரவாங் பத்து அராங் சாலை அருகே ஓயே உணவகம் தனது நான்காவது கிளையை பிரமாண்டமாக திறப்பு விழா கண்டிருக்கிறது.

ம.இ.கா. தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் அதிகாரப்பூர்வமாக இந்த ஓயே உணவகத்தின் நான்காவது கிளை உணவகத்தை திறந்துவைத்தார்.

வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாக வசதிகளோடு ரவாங் ஓயே உணவகம் அமைக்கப்பட்டுள்ளது என உணவகத்தின் தோற்றுனரான பாபு கூறினார்.

மேலும் புதிதாக திறந்திருக்கும் இந்த உணவகத்தில் மீன் தலைகறி சிறப்பு உணவாக வழங்கவிருக்கிறோம். மேலும் இவ்வுணாகத்தில் வாடிக்கையாளர்கள் சிரு நிகழ்ச்சிகளும் நடத்துவதற்கு ஏதுவாக சிறு அறையும் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதோடு மட்டுமில்லாமல் உணவகத்திற்கு ஹலால் சான்றிதல் பெறுவதற்கு விண்ணப்பம் செய்திருப்பதாகவும் பாபு கூறினார்.

ஒயே உணவகம் வியாபாரத்தை கடந்து பொதுமக்களுக்கும் உதவும் நோக்கத்தோடு சமூக பொறுப்பு திட்டங்களிலும் அதிக கவனம் செலுத்திவருகிறது.

அதனடிப்படையில் அன்மையில் புக்கிட் பெருந்தோங்கில் இந்திய மாது ஒருவருக்கு சிரு தொழில் தொடங்குவதற்கு ஓயே உணவக உதவி செய்துள்ளது. கணவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு குடும்பச்சுமையை குறைக்கும் வகையில் அந்த இந்திய மாது உதவி கோரியிருந்த வேளையில் தொழில் தொடங்குவதற்கான உதவிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் கேள்வியெழுப்பிதற்கு பதிலாக ஓயே உணவகத்தின் உரிமையாளரில் ஒருவராக டெனிஸ் குமார் கூறுகையில். நாங்கள் எங்களது வியாபரத்தின் வழி கிடைக்கும் இலாபத்திலிருந்து இதுபோன்ற சமுக பொறுப்பு திட்டங்களை தொடர்ந்து செய்யவிருப்பதாக ஓயே உணவக உரிமையாளர்கள் டெனிஸ் குமார், பாபு, வினான் தாஸ் தெரிவித்தனர்.

உணவக திறப்பு விழாவில் பல முக்கிய பிரமுகர்களும் மலேசிய கலையுலக நட்சட்திரங்களுடன் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles