
தெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், துருக்கி அதிபர் தயிப் எர்டோகன் உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளானதில், : ஈரான் அதிபர் சையது இப்ராஹிம் ரெய்சி (63) உயிரிழந்தார். ஹெலிகாப்டரில் உடன் சென்ற வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியன் உள்ளிட்ட 8 பேரும் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.

