
கோலாலம்பூர், மே 22-
கூட்டரசு பிரதேசத்தில் உள்ள செபூத்தோ புக்கிட் ஜாலில் ஜசெக கிளை ஆண்டுக் கூட்டம் நேற்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
செபூத்தோ நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு முழு ஆதரவு வழங்கினார்.
புக்கிட் ஜாலில் ஜசெக கிளை தலைவர் டிக்காம் லூர்ட்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

