
செ.வே. முத்தமிழ் மன்னன்
சுபாங், மே 21-
மலேசியா பல்கலைக்கழகத்தின் இந்திய பட்டதாரிகளின் சங்கம் (MAIUG) ஏற்பாடு செய்திருந்த தமிழ்ப் பள்ளிகளுக்கு நிதி திரட்டும் தொண்டு விருந்து நிகழ்ச்சி Dorsett Grand Subang Jaya தங்கும் விடுதியில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது
இந்த நிகழ்வு மிகவும் ஊக்கமளிக்கும் வருகையைப் பதிவுசெய்தது என்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களில் பிரபல வழக்கறிஞர் டத்தோ அஹ்மட் ஜஹாரில் முஹையரும் அடங்குவார்.
நல்ல நோக்கத்திற்காக நடத்தப்பட்ட இந்த விருந்து நிகழ்ச்சி மிகவும் பாராட்டுக்குரியது என்று அவர் சொன்னார்.

