டத்தோஸ்ரீ உத்தாமா கர்ப்பால் சிங்கின்10ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி!

செ.வே. முத்தமிழ் மன்னன்

பினாங்கு, மே 21-
எனது அன்புக்குரிய தந்தை மறைந்த டத்தோஸ்ரீ உத்தாமா கர்பால் சிங்கின் மரபை மீண்டும் ஒருமுறை நினைவு கூர்கிறோம்.

அவர் எம்மை விட்டுப் பிரிந்து 10 வருடங்கள் கடந்துள்ள போதிலும், அவரது உணர்வும், நாட்டிற்கான பங்களிப்பும் வரலாற்றின் நினைவிலும் பசுமையாக இருக்கிறது என்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

Marriott Hotel பினாங்கில் நடைபெற்ற டிஏபி பினாங்கினால் ஏற்பாடு செய்யப்பட்ட கர்ப்பால் சிங் – 10ஆவது ஆண்டு நினைவு’ நிகழ்ச்சியில் என் தந்தையின் மீதான அன்பும் மரியாதையும் என்னை வெகுவாகக் கவர்ந்தன என்று அவர் தமது உரையில் குறிப்பிட்டார். ஜசெக தலைவர் Lim Guan Eng, Sdri Kasthuri Patto, பினாங்கு மாநில முதல்வர் YB Chow Kon Yeow, புக்கிட் குளுக்கோர் நாடாளுமன்ற உறுப்பினர் Ramkarpal Singh, மனிதவள அமைச்சர் YB Steven Sim உட்பட பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles