சிநேகம் மலேசியாவின் அன்னையர் மனநல கலந்துரையாடல் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது!

கோலாலம்பூர் மே 21- சிநேகம் மலேசியா சமீபத்தில் அன்னையர் தினத்தையும் தனது 5ஆவது ஆண்டு விழாவையும் கொண்டாடும் வகையில் “அன்னையர் மனநலம்: குடும்ப மற்றும் சமூக நலத்தின் அடித்தளம்” என்ற தலைப்பில் மனநல கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தியது.

இந்த நிகழ்ச்சி அன்னையர்களிடையே மனநலத்தின் முக்கியத்துவம் மற்றும் அவசியமான நேரத்தில் உதவியை நாடுவதன் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முனைந்தது.

இந்த நிகழ்ச்சியில் பல சமூகப் பின்புலங்களை சேர்ந்த 50 அன்னையர்கள் கலந்து கொண்டனர்.

இவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பெரிதும் கவனிக்கப்படாத ஒரு தலைப்பைப் பற்றிப் பேசுவதற்கான தளமாக அமைந்தது.

இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி அன்னையர்களுக்குத் தங்களின் மனநலத்தை முக்கியமாகக் கருதி தன்னலத்தை முன்னிலைப்படுத்துவதையும் ஆதரவை நாடுவதையும் வலியுறுத்தியது.

அன்னையர் தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இந்த நிகழ்ச்சி அன்னையர்களின் முகங்களில் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

அவர்கள் வழங்கும் ஓய்வுரக்கமற்ற முயற்சிகளையும் நிபந்தனையற்ற அன்பையும் கௌரவிப்பதற்காக இது திகழ்ந்தது. ஒவ்வொரு குடும்பத்தின் முக்கியத்துவம் மற்றும் வீடுகளைக் கட்டியெழுப்பும் அன்பின் தூண்களாக அன்னையர்கள் இருப்பதை நினைவூட்டும் நிகழ்ச்சியாக அமைந்தது.

அன்னையர்களிடையே சமூக உணர்வை வளர்க்கும் ஒரு தளமாகவும் அமைந்தது. இந்த நிகழ்ச்சி அனுபவங்களைப் பகிர்வதற்கும், ஆதரவு வழங்குவதற்கும், அன்னையர்கள் தங்கள் குடும்பங்கள் மற்றும் சமூகங்களைப் பராமரிப்பதில் வெளிப்படும் மகிழ்ச்சி மற்றும் அர்ப்பணிப்பைக் கொண்டாடுவதற்கும் ஒரு தளமாக அமைந்தது.

சிநேகம் மலேசியாவின் 5ஆவது ஆண்டு விழாவானது, மனநல விழிப்புணர்வு மற்றும் அன்னையர்களை ஆதரிப்பதில் அமைப்பின் அர்ப்பணிப்பிற்குப் பொருத்தமான மரியாதையாக அமைந்தது.

இது உடல்நல-மான மற்றும் மகிழ்ச்சியான குடும்பங்கள் மற்றும் சமூகங்களை உருவாக்குவதில் அன்னையர்களின் அற்புதமான பங்களிப்புகளைக் கொண்டாடிய முக்கியமான நிகழ்வாகும்.

மலேசிய சிநேகம் சமூகநல இயக்கம் (சிநேகம் மலேசியா) 2018-ல் நிறுவப்பட்ட இலாபநோக்கற்ற அமைப்பாகும்.

மனநல விழிப்புணர்வு மற்றும் தற்கொலை தடுப்பு குறித்து அர்ப்பணிப்புடன் செயல்படும் சிநேகம், அதிகாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை தினமும் 1800 22 5757 என்ற எண்ணில் இலவச தொலைபேசி ஆலோசனைகளை வழங்குகிறது.

ஆலோசனைகள் பாஹாசா, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கிடைக்கும். இந்தச் சேவைகள் உணர்வு ரீதியான சவால்களை எதிர்கொள்வோருக்கு ஆதரவு மற்றும் வழிகாட்டுதலை வழங்குகின்றது. பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் தேவையுள்ளவர்களுக்குத் தாராளமாகவும் சீர்படுத்தியும் செவிகொடுத்தும் உதவுகின்றனர்.

இந்த உதவி மையம் நாடு முழுவதும் அனைவருக்கும் எந்த இனம், மதம், பாலினம் அல்லது இனப்பிரிவையும் பொருட்படுத்தாமல், இலவசமாகவும் ரகசியமாகவும் கிடைக்கின்றது.

சிநேகம் மலேசியாவின் நோக்கம் தங்கள் மனநலத்தில் போராடும் தனிநபர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் ஆதரவான தளத்தை உருவாக்குவதாகும். தற்கொலை ஆபத்தை குறைக்கவும் சமூக நலனை மேம்படுத்தவும் இந்த அமைப்பு முயற்சிக்கிறது. மேலும் தகவலுக்கு, சிநேகம் மலேசியாவின் வாட்ஸ்அப் சேவைகள் 010-2945722 அல்லது snehammalaysia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles