அதிகாரிகள் – மக்கள் பிரதிநிதிக்கு எதிரான அச்சுறுத்தல்கள் திட்டமிடப்பட்டதா? போலீஸ் விசாரணை

புத்ராஜெயா, மே 21 – முக்கியமான தேசிய அமைப்புகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சமீபத்திய சம்பவங்கள் தற்செயலாக நடந்ததா அல்லது திட்டமிடப்பட்டதா என்பதைக் கண்டறிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறையும் உள்துறை அமைச்சும் இந்த விவகாரத்தை தீவிரமாகக் கருதுவதோடு மேலும் அசம்பாவிதங்களைத் தடுக்க நிலைமையைக் அணுக்கமாக கண்காணித்து வருகின்றன என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

அந்த தாக்குதல்கள் ஏதேச்சையாக நடந்ததா? அல்லது ஒருங்கிணைந்த திட்டத்தின் ஒரு பகுதியா? அவ்வாறு திட்டமிடப்பட்டவையாக இருந்தால் தனிநபர் அல்லது கும்பல்களால் மேற்கொள்ளப்பட்டதா என்பதை தீர்மானிப்பது மிகவும் முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles