
எம் பவளச்செல்வன்
சுங்கை பட்டாணி மே 20-
நாடு தழுவிய அளவில் ம இகா தொகுதி தேர்தல்கள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் கடாரத்தில் சுங்கை பட்டாணி தொகுதி தேர்தல் அனல் பறந்தது.
சுங்கை பட்டாணி மஇகா தொகுதி தேர்தலில் துணை தலைவர் பதவிக்கு கடுமையான போட்டி நிலவியது.
துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மாணிக்கவாசகம் 21 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
எதிர்த்து போட்டியிட்ட சுதாகரன் 17 வாக்குகள் பெற்று தோல்வி கண்டார்.
கெடா மாநில முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சுப்ரமணியத்தின் மகனாவார்.
நடப்பு செயலாளர் மாணிக்கவாசகம் இம்முறை துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

