
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வாரவிடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் வழக்கத்தை விட அதிகளவு பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் தினமும் பக்தர்களின் வருகை அதிகளவு உள்ளது.
நேற்று கோயிலில் 85,825 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 36,146 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.4.40 கோடி காணிக்கை செலுத்தினர்.