ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஈரான் அதிபர் ரைசியின் இறுதி ஊர்வலம்! ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி

டெஹ்ரான்: ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஈரான் அதிபர் ரைசி, வெளியுறவு அமைச்சர் அமிரப்துல்லாஹியன் உள்ளிட்டோரின் இறுதி ஊர்வலம் தப்ரிஸ் நகரில் தொடங்கியது.

ஆயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹுசேன் அமிரப்துல்லாஹியன் உள்ளிட்ட 8 பேர் கடந்த 19ம் தேதி பயணித்த ஹெலிகாப்டர், ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அடர்ந்த வனப்பகுதியில் மலைகளின் மீது விழுந்து நொறுங்கியது.
மோசமான வானிலையால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கருதப்படுகிறது. தீவிர தேடுதல் முயற்சிக்குப் பின் அதிபர் ரைசி உள்ளிட்ட 8 பேரின் சடலங்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டன. அதிபரின் மறைவைத் தொடர்ந்து 5 நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படுவதாக ஈரான் உச்ச லைவர் ஆயத்துல்லா அலி காமனெயி அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து விமான விபத்தில் உயிரிழந்த அதிபர் ரைசி உள்ளிட்டோரின் உடல்கள் கொண்டு செல்லப்பட்ட தப்ரிஸ் நகரில் இருந்து இறுதி ஊர்வலம் நேற்று தொடங்கியது.

இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கறுப்பு உடையுடன் குவிந்து அதிபர் ரைசி உள்ளிட்டோருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

reuters

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles