ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த அமைச்சர் Fahmi Fadzil உடனடியாக நடவடிக்கை வேண்டும்!

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் மே 23- மலேசியத் தீபகற்ப பத்திரிகையாளர்களின் தேசிய சங்கம் (NUJ) இன்று வெளியிட்ட அறிக்கையில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாமி பட்சில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன் வைத்துள்ளது.

தமிழ் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் தீவிரமானது. இதில் இணையத்தள பத்திரிக்கையாளர்களும் இடம்பெற்றிருக்கிறார்கள்.

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்து நாங்கள் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம் என்று சங்கத்தின் செயலாளர் தே ஆதிரா முகமட் யூசோப் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பத்திரிகையாளர்கள் P. புவனேஸ்வரன், M. பாவளம், அத்துடன் ஒட்டுமொத்த தமிழ் ஊடகவியலாளருக்கு முழு ஆதரவு வழங்குகிறோம்.

எங்கள் தோழர்களான மலேசிய இந்தியப் பத்திரிக்கையாளர்களுக்கும் எங்கள் ஒற்றுமையைத் தெரிவிக்க விரும்புகிறோம்.

தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் அவதூறு தாக்குதலுக்கு சில தமிழ் போர்டல் ஊடகவியலாளர்கள் பலியாகியுள்ளதாக கூறப்படுவதை அடுத்து, தகவல் தொடர்பு அமைச்சர் Fahmi Fadzil உடன் சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ள மலேசிய இந்திய பத்திரிகையாளர் சங்கம் (MIJA) தெரிவித்துள்ளது

ஊடகவியலாளர்கள் மீதான தனிப்பட்ட தாக்குதல்களை நிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் Fahmi Fadzil ஐ கேட்டுக்கொள்கிறோம்..

ஊடக சுதந்திரமும், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பும் பாதுகாக்கப்பட வேண்டும்.

சுதந்திரமான செய்தி அறிக்கை தொடரலாம். மேலும், காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை நடவடிக்கைகளுக்கு மதிப்பளிக்குமாறு அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறோம்,

மேலும் இந்த சம்பவத்திற்கு எங்கள் தோழர்களுக்கு ஒரு நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

NUJ இதை தொடர்ந்து கண்காணித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு ஆதரவையும் வழங்கும்.

மலேசியாவில் பத்திரிகை ஒருமைப்பாடு மற்றும் ஊடக சுதந்திரம் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வோம் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles