
கோலாலம்பூர் மே 27-
புக்கிட் ஹாலில் அக்ஸித்தா அரங்கில் நடைபெற்ற மலேசிய பொது பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி வி. சிந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சீனாவின் வாங் என்பவரிடம் 21-16, 5-21,1-21 என்ற புள்ளி கணக்கில் தோல்வி கண்டார்
27 வயதான சிந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு இறுதி ஆட்டத்திற்கு தேர்வு பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்

