SPM தேர்வில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை !தமிழ்மொழி, தமிழ் இலக்கியத்தில் “ஏ” பெற்று பெருமை சேர்த்தனர்!

காளிதாஸ் சுப்ரமணியம்

ஈப்போ, மே.27:
பேராக் மாநிலத்தில் உள்ள இடைநிலைப்பள்ளிகளில் இன்று வெளியான எஸ்.பி.எம் தேர்வு முடிவுகளில் தமிழ்ப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 11ஏ பெற்று சாதனை படைத்துள்ளனர்.

புந்தோங் வட்டாரத்தில் ஸ்ரீ புத்ரி பெண்கள் இடைநிலைப் பள்ளியில் இங்குள்ள 5 தமிழ்ப்பள்ளியை பின்னணி கொண்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில் இம்முறை 3 மாணவிகள் 11 ஏ பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். இவர்களில் நேசமணி விக்டர், அனக லெச்சிமி வேலாயுதம் மற்றும் பாக்கியலெச்சிமி ஆறுமுகம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இம்மாணவிகளை தவிர்த்து கார்த்திகா நீலமேகம் 10ஏ 1 பி மற்றும் நர்மித்தா பொன்னிராஜா, கவின்மலர் நல்லகுமார், பகவதி கார்த்திகேசு ஆகியோர் 9ஏ கிடைக்கப்பெற்ற மாணவிகளாவர்.

இம்முறை புந்தோங்கின ஆண்கள் இடைநிலைப்பள்ளி மாணவன் தனு அக்சை சிவசுப்பிரமணியம் 9 ஏ பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இம்மாணவர்களில் பெரும்பாலோர் திட்டமிட்டு நேரத்தை நன்கு நிர்வகித்து பாடங்களை படித்து வந்ததால் இத்தகைய சிறந்த தேர்வு முடிவு கிடைத்துள்ளதாக கூறினர். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் அர்பணிப்பு மற்றும் தியாக மனப்பான்மையால் வெற்றி பெற்றதாக கருத்துரைத்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles