

ஈப்போ, மே.27: இங்குள்ள ஏ.சி. எஸ். இடைநிலைப்பள்ளி மாணவன் அகதீசன் குமரேசன் எஸ்.பி.எம் தேர்வில் 10 ஏ பெற்று சாதனை படைத்தார். இவர் இப்பள்ளியின் சிறந்த மாணவனாக பிரகடனப்படுத்தப்பட்டார். இவரை பள்ளி நிர்வாகத்தினர் சிறப்பித்து மகிழ்ந்தனர்.
என் மகன் எல்லா பாடங்களிலும் ஏ பிளாஸ் பெற்றிருந்தாலும், தமிழ்மொழி பாடத்தில் ஏ பிளாஸ் கிடைத்துள்ளதை காணும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று தந்தை குமரேசன் மகிழ்ச்சியுடன் கூறினார்.
தமது 3 பிள்ளைகளும் ஈப்போ செட்டியார் தமிழ்ப்பள்ளி மாணவர்கள். இவர் தம்முடைய முதல் மகனாவார். இவரது தம்பி ஏ சி.எஸ். பள்ளியில் 4 ம் படிவம் படித்து வருகிறார். இவர்களது தங்கை மெயின் கன்வென் பள்ளியில் படித்து வருகிறார். என் 3 பிள்ளைகளும் செட்டியார் தமிழ்ப்பள்ளியில் ஆரம்ப கல்வியை தொடங்கியவர்கள் என்று பெருமையுடன் கூறினார் தந்தை குமரேசன்.

