
கோலாலம்பூர், மே 28 – அமெரிக்காவில் உள்ளவர்களைக் இலக்காகக் கொண்டு இணைய சூதாட்டம் மற்றும் காதல் மோசடிகளை நடத்தி வந்த கும்பலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஒரு பெண் உட்பட 12 பேர் கைது காவல் துறையால் செய்யப்பட்டுள்ளனர்.
பதினெட்டு முதல் 43 வயது வரையிலான அந்த சந்தேக நபர்கள் கடந்த மே 16ஆம் தேதி நகரில் உள்ள குடியிருப்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் வணிக குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப் கூறினார்.
அ கும்பலிடமிருந்து ஒன்பது மடிக்கணினிகள், 33 கைத்தொலைபேசிகள், ஒரு தங்க நெக்லஸ், ஐந்து மோதிரங்கள், இரண்டு செட் ஆடம்பரக் கைக்கடிகாரங்கள், பல்வேறு மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர் என அவர் சொன்னார்.

