
ஷா ஆலம், மே 29– சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் முதலாம் கட்டப் பகுதியில் பராமரிப்பு மற்றும் கருவிகளை மாற்றும் பணி வரும் ஜூன் 5 ஆம் தேதி காலை 9.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை மேற்கொள்ளப்படும்.
இந்த நடவடிக்கையின் காரணமாக பெட்டாலிங், கிள்ளான், ஷா ஆலம், கோம்பாக், கோலாலம்பூர், உலு சிலாங்கூர் மற்றும் கோல சிலாங்கூர் பகுதிகளில் அட்டவணையிடப்பட்ட நீர் விநியோகத் தடை ஏற்படும்.
பாதிக்கப்படும் பகுதிகளிலுள்ள பயனீட்டாளர்கள் போதுமான அளவு நீரை சேமித்து வைக்கவும் இடையூறு ஏற்படும்
காலம் முழுவதும் நீரை கவனமாகப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப் படுகிறார்கள் என்று பென்குருசன் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் தெரிவித்துள்ளது
மேலும் போதுமான குடிநீரை சேமித்து வைக்கும் படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பெர்னாமா

