தஞ்சோங் மாலிம் டிஷாலினி 11ஏ பெற்றார்!!

தஞ்சோங் மாலிம்,மே28: தஞ்சோங் மாலிம் மெதடிஸ் இடைநிலைப்பள்ளியை சார்ந்த டிஷாலினி இராஜா எஸ்.பி.எம் தேர்வில் 11 ஏ பெற்று பள்ளிக்கும் பெற்றோர்கள்,ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்தார்.

தனது ஆரம்பக் கல்வியை டான்ஸ்ரீ டத்தோ மாணிக்கவாசகம் தமிழ்ப்பள்ளியில் தொடங்கிய இவர் இடைநிலைப்பள்ளியில் தமிழ் மொழி,தமிழ் இலக்கியம் உட்பட அனைத்து பாடத்திலும் ஏ பெற்று தாய்மொழி கல்வியின் பெருமையையும் எடுத்துரைத்துள்ளார்.

தன் மகளின் வெற்றியில் பெருமிதம் கொள்ளும் டிஷாலினியின் பெற்றோர்களான திரு.திருமதி.இராஜா – ஷர்மிளா தம்பதியர் கற்பித்த ஆசிரியர்களுக்கு நன்றியையும் பதிவு செய்தனர்.

சிறந்த அடைவுநிலையை பதிவு செய்திருக்கும் டிஷலினி தனத் உயர்கல்வுயை மருத்துவதுறையில் மேற்கொள்ள இருப்பதாகவும் தனது இலக்கை குறிப்பிட்டார்.

மேலும்,பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்து கொண்டார் டிஷலினி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles