

2023 ம் ஆண்டு வெளியான எஸ்.பி.எம் தேர்வு முடிவுகளில் பெரும்பாலான மாணவர்கள் சிறந்த தேர்ச்சியினைப் பெற்றனர்.
எல்லாப் படங்களிலும் தேர்ச்சி விகிதம் அதிகரித்திருப்பதாக பள்ளியின் முதல்வர் திரு.கருணாகரன் பெருமையுடன் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு 7 மாணவர்கள் அனைத்துப் படங்களிலும் ஏ பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர்.
தாங்கள் எழுதிய அனைத்துப் படங்களிலும் ஏ பெற்றவர்கள் சியா பெங் சாய்,நிவேகன் நாயுடு த/பெ பாலகிருஸ்ணன்,சதேஸ் த/பெ ரமேஸ்,நோர் சமிரா,நாகேஸ்வரி த/பெ தயாளன்,நோர் சாயிரா,சக்திவேல் த/பெ ராதாகிருஷ்ணன் ஆகியோராவர்.
சிறப்பு தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பள்ளி முதல்வர் கருணாகரன் ,சான்றிதலையும்,பரிசுகளையும் எடுத்து வழங்கினார்.
மேலும் இவ்வெற்றிக்கு அயராது பாடுபட்ட பள்ளி ஆசிரியர்களுக்குத் தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

