மாணவர்களுக்கு 100 ரிங்கிட் புத்தக பற்றுச்சீட்டு: பிரதமர் அறிவிப்பு

கோலாலம்பூர்:
மாணவர்களுக்கு 100 ரிங்கிட் புத்தக பற்றுச்சீட்டு வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை அறிவித்தார்.

ஆரம்பப் பள்ளியில் நான்காம் வகுப்புக்கு மேல், மேல்நிலைப் பள்ளி முதல் உயர்கல்விக் கூடங்களில் பயிலும் மாணவர்கள் வரை என அனைவரும் இந்த பற்றுச்சீட்டை பெற தகுதியானவர்களாகும்.

தேசியப் பள்ளிகள், அரபுப் பள்ளிகள், சீன அல்லது தமிழ்ப்பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் என அனைத்து மாணவர்களுக்கும் இந்த பற்றுச்சீட்டு வழங்கப்படும்.

இந்த ஆண்டு அரசாங்கத்தின் நிதி அழுத்தத்தைக் குறைக்க நான்காம் வகுப்பிலிருந்து இத்திட்டத்தை அரசு தொடங்குகிறது.

தலைநகர் கோலாலம்பூர் அனைத்துலக வர்த்தக மையத்தில் நடைபெறும் அனைத்துலக புத்தகக் கண்காட்சியை தொடக்கி வைத்த பிரதமர் இவ்வாறு கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles