
ஈப்போ, ஜுன்.1: பேராக் இந்திய கால்பந்து சங்கம் சிறப்பாக தம் நடவடிக்கைகளை மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் மேம்பாட்டிற்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இச்சங்கம் மேலும் சிறப்பாக செயல்பட 38 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவியை பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் வழங்கினார். இவ்வேளையில் அன்னவருக்கும் பேராக் மாநில அரசுவிற்கும் நன்றியைக் கூறிக்கொண்டார் பேராக் இந்திய கால்பந்து சங்க தலைவர் டத்தோ அமாலுடின் இஸ்மாயில்.
எதிர்வரும் ஜுலை மாதம் 7ல், பேராக் மாநில தழிழ்ப்பள்ளிகளுக் கிடையிலான கால்பந்து போட்டி, ஈப்போ மாநரின் ஈப்போ பாடாங்கில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முறை ஆண்கள் மற்றும் பெண்கள் என்ற இரு பிரிவிலும் போட்டிகள் நடத்தப்படவுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
பேராக் மாநிலத்தில் 134 தமிழ்ப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பள்ளியிலிருந்து ஒரு குழுவை அனுப்பிவைக்க முன்னுரிமை வழங்கப்படுகிறது. இரு குழுவை அனுப்பலாம் என்ற நிலைப்பாடு குறித்து ஏற்பாட்டு செயற்குழுவினரிடம் பிறகு கலந்தாலோசித்து தீர்வு காணமுற்படும்படி பள்ளி நிர்வாகத்தை அவர் கேட்டுக்கொண்டார்.
அதுமட்டுமின்றி, இம்முறை தமிழ்ப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே விளையாட அனுமதிக்கப்படுவர். ஆகையால், தேசிய மற்றும் சீனப்பள்ளியில் பயிலும் இந்திய மாணவர்களை சேர்த்துக்கொள்ள முடியாது என்று ஏற்பாட்டுக்குழுவினர் முடிவெடுத்து விட்டதாக அவர் குறிப்பிட்டார்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கால்பந்து போட்டிகள் ஈப்போ பாடங்கில் நடக்கவுள்ளதால் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் களுக்கு போக்கு வரத்து பிரச்சினைகள் எதுவும் இருக்காது. மாணவர்களுக்கு காலையுணவு மற்றும் மதிய உணவை ஏற்பாட்டுக்குழுவினர் வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக டத்தோ அமாலுடின் இஸ்மாயில் கருத்துரைத்தார்.

