பிரதமர் அன்வார் இப்ராஹிமின் மானிய சீராய்வு திட்டத்திற்கு பொருளாதார வல்லுநர்கள் வரவேற்பு!


பெட்டாலிங் ஜெயா மே 31 ;- இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியங்கள் குறித்து பிரதமர் அன்வார் இப்ராஹிமின் விளக்கத்தை பொருளாதார வல்லுநர்கள் வரவேற்றுள்ளனர்.

மலேசிய பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த சங்கரன் நம்பியார் கூறுகையில் இந்த முயற்சியால் தேசம் அடையும் நன்மைகளை எடுத்துரைத்து, பிரதமர் பொதுமக்களிடம் கலாச்சார மாற்றத்தை ஏற்படுத்த முனைவதாக கூறினார்.

மானிய சீராய்வு திட்டத்தினால் அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு 4 பில்லியன் ரிங்கிட் சேமிப்பை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“அடுத்த படி அவர் அதை எவ்வாறு செயல்படுத்த திட்டமிட்டுள்ளார் என்பதை விளக்க வேண்டும்” என்று நம்பியார் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய் கிழமை நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் சிறப்புரையாற்றிய அன்வார், இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம் தேவை என்று வலியுறுத்தினார்

நீர் மற்றும் மின்சாரத்திற்கான இலக்கு மானியங்களைப் போலவே, பெரும்பாலான மக்கள் பாதிக்கப் படாமல் இருப்பார்கள் என்று அவர் கூறினார்.

இந்த முயற்சியை சுற்றி, குறிப்பாக சமூக ஊடகங்களில் நிறைய தவறான புரிதல்களும் தவறான தகவல்களும் இருப்பதாகவும், பிரதமர் இதை சரி செய்ய விரும்பி இருப்பார் என்றும் நம்பியார் நம்புகிறார்.

bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles