பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் 7 கடைகளுக்கு சம்மன் விதிப்பதை நிறுத்துங்கள்! டத்தோ சந்திரகுமணன் வேண்டுகோள்

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர்: ஜூன் 6
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் 7 கடைகளுக்கு தொடர்ந்து சம்மன்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்துங்கள் என்று
மீரா கட்சியின் தலைவர் டத்தோ சந்திரகுமணன் கேட்டுக் கொண்டார்.

பிரிக்பீல்ட்ஸ் கோர்ட்டுமலை உணவகத்தை ஒட்டி 7 கடைகள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இக் கடைகளை அகற்றும் நடவடிக்கைகளுக்கு மத்தியில் பல முயற்சிகளை மேற்கொண்டு 7 கடைகளும் காப்பாற்றப்பட்டது.

குறிப்பாக அக்கடைகள் அங்கேயே நிலைநிறுத்தப்பட்டது. இருந்த போதிலும் அக் கடைகளுக்கான லைசென்ஸ் வழங்கப்படுவது தொடர்ந்து இழுப்பறியாகவே இருந்து வருகிறது.

இதனால் அக் கடைகளின் உரிமையாளர்களுக்கு 2 ஆயிரம் ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்பட்டது.இது அக் கடைகார்களுக்கு பெரும் மன உளைச்சலை தருகிறது.

இவ்விவகாரத்ததை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாரின் பார்வைக்கும் நான் கொண்டு சென்று விட்டேன்.ஆனால் தீர்வு கிடைக்கவில்லை.
எது எப்படி இருந்தாலும் அக் கடைகளுக்கான லைசென்ஸ் வழங்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles