சந்திராஸ்ரீ – யுகேந்திரன் 11 A பெற்றனர்

கிள்ளான் அமினுடின் பாகி இடைநிலைப்பள்ளியை சேர்ந்த சந்திராஸ்ரீ மறறும் யுகேந்திரன் ஆகிய இருவரும் எஸ்.பி.எம் தேர்வில் 11A பெற்று பள்ளிக்கும் குடும்பத்திற்கும் பெருமை சேர்த்தனர்.

பள்ளியில் தங்களின் எஸ்.பி.எம் தேர்வு முடிவு சான்றிதழை பெற்றுக்கொள்ள பெற்றோர்களுடன் வருகை புரிந்திருந்த அவ்விரு மாணவர்களும் பெரும் உற்சாகத்தோடும் தங்களின் நம்பிக்கையான எதிர்கால கனவோடும் மகிழ்ந்திருந்தனர்.

இராமசந்திரன் – நளினி தம்பதிகளின் மகளான சந்திராஸ்ரீ தனது ஆரம்பக் கல்வியை பிரிக்பிலிஸ் விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் பயின்றவராவார்.

இவர் தனது உயர்க்கல்வியை மருத்துவ துறையில் தொடரவிருப்பதாகவும் மருத்துவர் ஆவது இலக்கு என்றும் குறிப்பிட்டார்.

சிறந்த தேர்ச்சியினை பெற்றிருக்கும் மற்றுமொரு மாணவரான யுகேந்திர்ன் செயற்கை நுண்ணறிவு துறையில் கால்பதிக்க இருப்பதாகவும் கூறினார்.

எங்களின் சிறந்த தேர்ச்சிக்கு கற்பித்த ஆசிரியர்களும் பெற்றோர்களும் முதன்மை காரணம் என்றும் அவ்விருவரும் குறிப்பிட்டனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles