முனைவர் இராமநாயகத்திற்கு பன்னாட்டு மாநாட்டில் பொன்விழா வழங்கி கெளரவிக்கப்படவுள்ளார்.

ஈப்போ, ஜுன்.9: இம்மாதம் 14 முதல் 16 வரை ஸ்ரீலங்கா யாழ்பாணப் பல்கலைக்கழகத்தில் 17 வது பன்னாட்டு மாநாட்டு பொன்விழா நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் ஈப்போவை சேர்ந்த முனைவர் இராமநாயகம் விருது வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளார்.

இந்த பொன்விழா மாநாட்டை, உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலகமையில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த மூன்று நாள் நிகழ்வில் தமிழ்மொழி மற்றும் தமிழர்களுக்கும் அர்பணிப்பு செய்த சேவையாளர்கள் சிறப்பிக்கப்படவுள்ளனர். அவர்களில் மலேசிய நாட்டின் பிரதிநிதிதிதுவமாக முனைவர் இராமநாயகம் சிறப்பிக்கப்படவுள்ளார்.

இவர் பல்லாண்டுகளாக பொதுச்சேவையிலும்,அரசியலிலும் ஈடுபாடு கொண்டு மக்களுக்கு சேவையாற்றியவர். அதன் பொருட்டு இவருக்கு விருது வழங் கி கெளரவித்துள்ளார் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மறைந்த எம்.ஜி.இராமச்சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் இவரின் சேவையை பாராட்டும் வகையில் தற்போதைய தமிழகத்தின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முனைவர் இராமநாயகத்தை சிறப்பித்துள்ளார்.

இந்த உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் துணைதலைவராக இவர் சேவையாற்றி வருகிறார். இவருக்கு வழங்கப்படவுள்ள பொன்விழா விருது மலேசிய இந்தியர்களுக்கு பெருமை சேர்த்துள்ளதாக அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles