

பத்துகாஜா, ஜுன்.11: ஸ்ரீ கார்த்திகேயன் கோவில் ஜாலான் பெசார் ஈப்போ-லுமுட் சாலையோரம் மலை பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு நேரடியாக சென்று ஆலய சம்பந்தமான சில முக்கிய விஷயங்களைப் பற்றி ஆலய தலைவரிடம் விவாதிக்கப்பட்டது.
பத்துகாஜா நாடாளுமன்ற மக்கள் சேவை மையம் கடந்தாண்டு மின்சாரம் பொருத்தும் மறுசீரமைப்பு பணிகளுக்காக 20 ஆயிரம் ரிங்கிட் நன்கொடையாக வழங்கியது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது என்று பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் கூறினார்.
இங்குள்ள நன்கு பிரசித்து பெற்ற சுல்தான் யுயோசப் இடைநிலைப்பள்ளிக்கு 6 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டது. பத்துகாஜா நாடாளுமன்ற சேவை மையம், மக்கள் கல்வி மையம் திட்டங்களிலும், கல்வி மேம்பாடு மற்றும் பாடத்திட்டத்திலும் எப்போதும் உதவிகள் வழங்க தயாராக உள்ளது. இப்பள்ளியின் ஆறாம் படிவ இணை பாடத்திட்ட முகாமிற்கு இந்த நன்கொடையை வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், துரோனோ சின் லுங் போய் கூன் இயக்கத்தின் பங்களிப்பு அளப்பரியது. இந்த சங்கம் உள்ளூர் பகுதியில் தொண்டு பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகுறது. துரோனோ பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கும் இச்சங்கம் வாயிலாக பல உதவிகள் வழங்கப்படுகின்றன. இச்சங்கத்தின் சேவைக்கு பாராட்டையும், நன்றியையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.
அதுமட்டுமன்றி, தாமான் பெலங்கி, பூசிங்கில் முதியோர் ஒருவருக்கு புதிய சக்கர நாற்காலி வழங்கி உதவப்பட்டது. அவருடை பழைய சக்கர நாற்காலி பழுதடைந்து விட்டதால் இந்த புதிய சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. இம்முதியவரை நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்து பின் சக்கர நாற்காலி வழங்கப்பட்டதாக வ.சிவகுமார் தெரிவித்தார்.

