
கடந்த 12-ஆவது பொது தேர்தல் பிரச்சாரத்தில் எண்ணெய் விலை குறித்து பேசியப் பதிவைத் தற்போதைய எண்ணெய் விலையோடு ஒப்பீட்டுப் பேசுவது பொருத்தமற்றது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
சவுதி அரேபியா போன்ற எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளை விட நாட்டில் எண்ணெயின் விலை அதிகமாக இருந்தது என்று அவர் விளக்கினார்.
அந்த வீடியோ பதிவில் தாம் 12-ஆவது பொது தேர்தலில் வெற்றி பெற்றால் நாட்டில் எண்ணெய் விலை குறைக்கப்படும் என்றார் பிரதமர் அன்வார்.
2008-ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவில் அப்போது எண்ணெய் விலை சுமார் 50 சென் ஆக இருந்த நிலையில் நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 1.80-க்கு விற்பனையானது.
இப்போது சவூதி அரேபியாவில் பெட்ரோல் விலை 2.05 ரிங்கிட் நிலையில் நாட்டில் பெட்ரோல் விலை 2.95 ரிங்கிட்டிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
புருனையில் மட்டுமே எண்ணெய் விலை மலிவாக உள்ளது.
சிவில் பொருளாதார கட்டமைப்பின் கீழ் ஒரு பெரிய சீர்திருத்த நடவடிக்கையாக ஜூன் 10-ஆம் தேதி முதல் டீசலுக்கான உதவித்தொகையை அரசாங்கம் மீட்டுக்கொண்டது.

