
ஈப்போ,ஜூன் 12:
பீடோர் ஷேக் அப்துல் கனி இடைநிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் முருகன் த/பெ மனோகரன் அரச சாரணியர் விருதை (‘King’s Scout’ / Pengakap Raja) பேரா மாநில சுல்தான் நஸ்ரின் ஷாவிடமிருந்து பெற்றார்.
இவ்விருது பெற்றவர்களில் பத்தாங் பாடாங் மற்றும் முவாலிம் மாவட்டத்தைப் பிரதிநித்து விருது பெற்ற ஒரே மாணவராக முருகன் திகழ்கிறார்.
மேலும் விருது பெற்ற மொத்தம் 38 மாணவர்களின் இவர் ஆண்கள் பிரிவில் சிறந்த மாணவராக முதல் தங்க விருதுக்கு (1-st Emas) தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவருமான முருகன் மனோகரன் எஸ்.பி.எம் தேர்வில் 11 ஏ பெற்று பெருமை சேர்த்தவராவார்.
இவர் பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியில் பயின்று சிறந்த மாணவராக விருது பெற்ற நம்பிக்கை மாணவராவார்.
மேலும், முருகன் மனோகரன் நடந்து முடிந்த எஸ்.பி.எம் தேர்விலும் தமிழ்மொழி, இலக்கியப் பாடம் உட்பட அனைத்து பாடங்களிலும் ‘ஏ’ பெற்று பெருமை சேர்த்துள்ளார்.
அதுமட்டுமின்றி,அறிவியல், பட்டிமன்றம், சமயம், பேச்சுப்போட்டி, திருமறைப் போட்டிகளிலும் சாதனை படைத்து வந்த இவர் பள்ளியின் தலைமை மாணவனாகத் பொறுப்பேற்று திறன்பட திகழ்ந்துள்ளார்.
இவர் பேரா மாநில தமிழ்ப்பள்ளி முன்னாள் அமைப்பாளர் ந. மனோகரன், ஆசிரியை மணிமேகலை தம்பதியரின் புதல்வர் என்பதும் குறிப்பிடதக்கது.
அரச சாரணியர் விருது பெற்றிருக்கும் முருகன் தற்போது பெர்லிஸ் மாநிலத்தில் மெட்ரிக்குலேசன் கல்லூரியில் தனது உயர்கல்வியை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

