
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் ஜூன் 14-
தீயில் அழிந்த தமிழன் உதவும் கரங்கள் சேவை மையத்தின் சீரமைப்பு பணிக்கு
துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி 10,000 வெள்ளியை வழங்கி நிதியுதவி பேருதவி புரிந்தார்.
துணைப் பிரதமரின் இந்திய பிரிவு சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி இந்த 10,000 வெள்ளியை தமிழன் உதவும் கரங்கள் தலைவர் முரளியிடம் நேரடியாக வழங்கினார்.
தமிழன் உதவும் கரங்கள் எனும் இயக்கத்தின் வாயிலாக முரளி பல சமூக சேவைகளை செய்து வருகிறார் என்பது நாடறியும்.
ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தின் போது மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலி உதவியோடு பத்துமலை மேல்குகைக்கு அழைத்து செல்லப்படு வார்கள்.
அதே வேளையில் சிறையில் இருந்து வெளியே வருபவர்களுக்கு பல வழிகாட்டல்களை அவர் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் தீயில் அழிந்த அவரின் மையத்தை சீரமைக்கும் நோக்கில் துணைப் பிரதமர் 10 ஆயிரம் ரிங்கிட் நிதி வழங்கியது மிகவும் பாராட்டுக்குரியது.

