தெக்குன் ஸ்பூமி திட்டத்தில்51 இந்தியர்களுக்கு காசோலை வழங்கப்பட்டது !

காளிதாஸ் சுப்ரமணியம்

சுங்கை பூலோ, ஜூன் 14-
அரசாங்கத்தின் தெக்குன் ஸ்பூமி திட்டத்தின் கீழ் இன்று 51 இந்திய வர்த்தகத்களுக்கு காசோலை வழங்கப்பட்டது.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ரமணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 51 இந்தியர்கள் காசோலையை நேரடியாக பெற்றுக் கொண்டனர்.

சிறு, குறு, நடுத்தர இந்திய வர்த்தகர்களுக்கு உதவும் நோக்கில் தெக்குன் கீழ் ஸ்பூமி கோஸ்பிக் எனும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதாக டத்தோ இரமணன் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் 3 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் கடந்த 2 மாதங்களில் கிட்டத்தட்ட 81 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

இந்த விண்ணப்பங்களின் மொத்த மதிப்பு 72 லட்சமாகும்.

81 விண்ணப்பங்களில் 51 விண்ணப்பங்கள் தெக்குன் நிர்வாகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு காசோலை வழங்கப்பட்டது.

அவர்கள் விண்ணப்பித்த தொகைக்கான காசோலை இன்று அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

அதே வேளையில் 27 பேரின் விண்ணப்பங்களுக்கு விரைவில் பரிசீலனை செய்து ஒப்புதல் வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles