பாங்கி இந்து மயான பராமரிப்புக்குஅமைச்சர் கோபிந்த் சிங் டியோ உதவிக்கரம்!

புத்ரா ஜெயா, ஜூன் 14-
பாங்கி இந்து மயான பராமரிப்புக்கு டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ உதவிக்கரம் நீட்டி. உள்ளார் .

டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோவின் அரசியல் செயலாளர் மாண்புமிகு சுரேஷ் சிங்குடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போது அமைச்சர் கோபிந்த் சிங் டியோ உதவி கரம் நீட்டினார்.

பாங்கி இந்து மயான பராமரிப்பு சங்கத்தின் தலைவர் மகேந்திரன் மற்றும் செயலாளர் ஆசிரியர் முனியாண்டி ஆகியோருடன் பாங்கி வட்டார மண்ணின் மைந்தர் பத்திரிகையாளர் செ.வே. முத்தமிழ் மன்னனும் கலந்து கொண்டார்.

நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் பாங்கி இந்து மயானம் அமைந்துள்ளது. இதனை பராமரித்து சுத்தம் செய்ய நிதி தேவைப்படுகிறது என்று தலைவர் மகேந்திரன் தெரிவித்தார்.

இதனை கருத்தில் கொண்டு பாங்கி இந்து மயான பராமரிப்புக்கு உதவ அமைச்சர் கோபிந்த் சிங் டியோ முன் வந்திருப்பதாக அவரின் செயலாளர் சுரேஸ் சிங் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles