சத்துணவு இல்லாததால் காஸாவில் 8,000க்கும் மேற்பட்ட சிறார்கள் பாதிப்பு- 28 பேர் உயிரிழப்பு

அம்மான், ஜூன் 14- காஸா தீபகற்பத்தில் கடுமையான ஊட்டசத்து
பற்றாக்குறையால் ஐந்து வயதுக்கும் குறைவான சுமார் 8,000 சிறார்கள்
மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அவர்களில் 1,600 பேர் மிகவும் மோசமான நிலையில் உள்ளதோடு இந்த பாதிப்பு காரணமாக
28 பேர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேலுடனான மோதல் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள காஸா
தீபகற்பத்திலுள்ள மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை
எதிர்நோக்கி வருவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை
இயக்குநரான தெட்ரோஸ் அட்ஹனோம் கிப்ரியசுஸ் நேற்று ஜெனிவாவில்
நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

reuters

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles