பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பினாங்கு இந்தியர் கால்பந்து சங்கத்தின் டத்தோ சுப்பையா – டிரிடோனி கிண்ணக் கால்பந்து போட்டி!

பிறை, ஜூன் 15-
பினாங்கில் உள்ள பாடாங் பிரவுனில் நடைபெற்ற டத்தோ பிகே சுப்பையா மற்றும் டிரிடோனி கிண்ணக கால்பந்து போட்டி
போட்டிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டத்தோ பிகே சுப்பையா போட்டியில் மொத்தம் 26 பள்ளிகள் பங்கேற்றன. இதில் ஆண் மாணவர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

இதில் மலாக்கோப் தமிழ்ப்பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றது. மாக் மண்டின் தமிழ்ப் பள்ளி இரண்டாம் இடத்தைப் பிடித்த வேளையில் நிபோங் திபால், லாடாங் மே பீல்டு தமிழ்ப் பள்ளிகள் 3,4 இடத்தை பிடித்துள்ளது.

பெண்களுக்கான டிரிடோனி கிண்ணக கால்பந்து போட்டியில் 19 குழுக்கள் போட்டியிட்டன.

இதில் புக்கிட் மெர்தாஜாம் தமிழ்ப் பள்ளி முதல் இடத்தை பிடித்தது.

பிறை தமிழ்ப் பள்ளி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. ஜாவி மற்றும் பெர்மாத்தாங் திங்கி தமிழ் பள்ளிகள் 3,4 இடத்தை பிடித்தது.

பினாங்கு இந்திய கால்பந்து சங்கம் (PIFA) மற்றும் பினாங்கு மாநில தமிழ் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மன்றம் ஆகியவற்றால் இந்த போட்டி மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டது..

புக்கிட் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ராயர் சிறப்பு வருகை புரிந்து போட்டியை தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் பினாங்கு மாநில தமிழ் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மன்றத்தின் துணைத் தலைவர் திரு. தேவேந்திரன், பினாங்கு மாநில பிஃபா தலைவர் திரு. பி பிரேம்குமார் மற்றும் டத்தோ கிராமாட் கிராமத் தலைவர் திரு.சிவ சுப்ரமணியன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர் என்று மீபா எனப்படும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் உதவித் தலைவர் ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles