இரண்டு கால்களையும் இழந்த எம்.ஜி.ஆர் ரகுவுக்கு அரவிந்த் அப்பளசாமி 10,000 வெள்ளி நிதியுதவி

கோலாலம்பூர் ஜூன் 16-
இரண்டு கால்களையும் இழந்திருக்கும் நாடாறிந்ந கலைஞர் ரகுவுக்கு சங்கர நாற்காலி மற்றும் நிதி திரட்டும் கலை நிகழ்ச்சி நேற்று தலைநகர் டான்ஸ்ரீ சோமா அரங்கில் நடைபெற்றது.

ஒரு தாய் மக்கள் எம் ஜி ஆர் கலைக்குடும்பம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கலை விழாவில் ஏராளமான கலைஞர்கள் கலந்து சிறப்பித்தனர்.

துணை பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடியின் இந்திய பிரிவு சிறப்பு அதிகாரி அரவிந்த் அப்பளசாமி முக்கிய பிரமுகராக கலந்து சிறப்பித்தார்.

கலைஞர் ரகுவின் சிகிச்சை நிதிக்கு அவர் பத்தாயிரம் வெள்ளியை வழங்கி உதவி புரிந்தார்.

சிலாங்கூர் மாநில மைபிபிபி கட்சியின் இடைக்கால தலைவர் டாக்டர் சுரேந்திரன், டத்தோஸ்ரீ முத்து ரத்தினம், டத்தோஸ்ரீ கலைவாணர், எம்ஜிஆர் விஜய் சேகர் உட்பட பல
நல்லுள்ளம் படைத்தவர்களும் உதவிக்கரம் நீட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles