பெருவாஸ் நாடாளுமன்ற தொகுதி யில் மகளிர்களுக்கு தையல்கலை பயிற்சி.மித்ராவின் ஆதரவிற்கு நன்றி

மஞ்சோங், ஜுன்.17: பெருவாஸ் நாடாளுமன்ற தொகுதியும், மித்ராவும் ஒன்றிணைந்து தையல்கலை பயிற்சி வகுப்பினை ஏற்பாடு செய்தது.

இப்பயிற்சி ஆயர்தாவார் கம்போங் கொலம்பியா புணிமாஸ் மண்டபத்தில் 4 நாட்களுக்கு நடைபெற்றது. இதில் தனித்து வாழும் தாய்பார்களும், இல்லத்தரசிகளும் கலந்துக்கொண்டு நன்மை அடைந்தனர் என்று பெருவாஸ் நாடாளுமன்ற தொகுதியின் இந்திய சமூகநலத்துறை சிறப்பு அதிகாரி கோ.தினகரன் கூறினார்.

இம்மாதிரியான கைத்தொழில்களை பெண்கள் கற்றுக்கொண்டால் தம் குடும்பத்திற்கு நல்ல வருமானத்தை கொண்டு வரமுடியும்.

இதனால் அவர்களின் வாழ்வாதாரம் மேம்பாடு காணும் என்று அவர் கருத்துரைத்தார்.

இவ்வேளையில் புண்ணிமாஸ் மண்டப உரிமையாளர் மற்றும் இந்நிகழ்வு சிறப்பாக செயல்பட உதவிய அனைத்து நல்லுள்ளங் கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கும் பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஙே கூ ஹாம் சார்பில் அவர் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்வின் நிறைவுவிழாவில் இந்த தையல்கலை பயிற்சியில் பங்குபெற்ற அனைத்து மகளிர்களுக்கும் தினகரன் நற்சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles