பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கு மீண்டும் மிகப்பெரிய மானியம் வழங்கப்பட்டது!

ஜோர்ஜ் டவுன் ஜூன் 19-
பினாங்கு மாநில அரசு மாநிலத்தில் உள்ள 28 தமிழ் பள்ளிகள் மற்றும் 3 பஞ்சாபி கல்வி மையங்களுக்கு நேற்று மிகப்பெரிய மானியத்தை வழங்கியது.

பினாங்கு மாநில முதல்வர்
சாவ் கூன் கோன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழ் பள்ளிகள் நேரடியாக மானியத்தை பெற்றுக் கொண்டன.

இந்த ஆண்டு பள்ளிக்கான மொத்த நன்கொடை 23 லட்சம் வெள்ளியாகும் என்று பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ தெரிவித்தார்.

2008 ஆம் ஆண்டு முதல் இதுநாள் வரை பினாங்கு மாநில அரசு மாநிலத்தில் உள்ள அனைத்து தமிழ் பள்ளிகளுக்கும் மிகப்பெரிய மானியத்தை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்த ஆண்டும் அனைத்து தமிழ்ப்பள்ளி இழுக்கும் பினாங்கு மாநில அரசு உதவி புரிந்துள்ளது.

பினாங்கு மாநில அரசு காசோலை வழங்கும் விழா கொம்தார் ஆடிட்டோரியத்தில் நேற்று விமரிசையாக நடைபெற்றது

பினாங்கு மாநில துணை முதல்வர் ஜக்டிப் சிங், ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ, பத்து ஊபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன், பகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் உட்பட பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles