டிரெய்லர் லோரி மோதி, சாலையைக் கடந்த ஆறு மாடுகள் மடிந்தன

அலோர் காஜா, ஜன 23- இங்குள்ள ஜாலான் செரேனா பூத்தேவில் இன்று அதிகாலை 5.10 மணியளவில் டிரெய்லர் லோரி மோதி ஆறு மாடுகள் இறந்தன.

இச்சம்பவம் நிகழ்ந்த போது 33 வயது நபர் செலுத்திய டிரெய்லர் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தாமான் புக்கிட் தம்பினிலிருந்து அலோர் காஜா நோக்கி சென்று கொண்டிருந்ததாக அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பரின்டெண்டன்ட் அஸாரி அபு சமா கூறினார்.

சம்பவ இடத்தை அடைந்த போது கும்பலாக சாலைக் கடந்த மாடுகள் மீது அந்த டிரெய்லர் மோதியது. இந்த விபத்தில் ஆறு மாடுகள் மடிந்தன என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles