
கோலாலம்பூர், ஜூன் 23- சுங்கை பாக்காப் இடைத் தேர்தல் பிரசாரத்தின் போது ஊழல் அல்லது அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்பான புகார்களை பொது மக்கள் தெரிவிப்பதற்கு ஏதுவாக ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்.பி.ஆர்.எம்.) அத்தொகுதியில் நடவடிக்கை அறையைத் திறந்துள்ளது.
பினாங்கு மாநில எஸ்.பி.ஆர்.எம். தலைமையகத்திலும் செபராங் பிறை எஸ்.பி.ஆர்.எம். கிளையிலும் இந்த நடவடிக்கை அறை செயல்படும் என்று அந்த ஊழல் தடுப்பு ஆணையம் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியது.
இந்த நடவடிக்கை அறை வரும் ஜூலை 6ஆம் தேதி வரை தினசரி 24 மணி நேரமும் செயல்படும். ஊழல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்பான புகார்களை பொது மக்கள் மின்ஞ்சல் வாயிலாக அல்லது 04-2299262 இணைப்பு 1107 என்ற எண்கள் மூலம் தெரிவிக்கலாம்.

